தமிழக செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்

மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ முருகப்பெருமானை வேண்டியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.இங்கு நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். மேலும் இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"கருணைக் கடலே கந்தா போற்றி"

இன்றைய தினம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அப்பன் முருகனை மனம் உருகி தரிசித்தேன்.பாரத மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ முருகப்பெருமானை வேண்டிக் கொண்டேன். வெற்றிவேல்! வீரவேல்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.