தமிழக செய்திகள்

நாம் தமிழர் கட்சிக்கு 5 தொகுதிகளில் 3-ம் இடம்

நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும்  அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி முக்கியமான கட்சிகளாக உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், கன்னியாகுமரியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 4-ம் இடத்தையே பிடித்தது. கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இம்முறை மைக் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?