தமிழக செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர.

தினத்தந்தி

சங்கரன்கோவில்:

தமிழகத்தில் வடமாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்த ஊசி பாசி விற்கின்ற வாக்ரிபோலி மொழி பேசக்கூடிய குருவிக்கார, வாக்ரி மக்களை தவறுதலாக நரிக்குறவர் என்று அடையாளப்படுத்துவதை கண்டித்தும், நரிக்குறவர் நலவாரியம் என்பதை குருவிக்கார நலவாரியம் என்று அறிவித்திட கோரியும் சங்கரன்கோவில் தேரடி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் பீர் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேடுவர் வேடர் நலச்சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத், இளைஞரணி செயலாளர் மகாராஜன், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் தங்கவேல், பசும்பொன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா ஆகியேர் கண்டன உரையாற்றினர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வேடுவர் வேடர் நலச்சங்க தென்காசி மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் ரமேஷ், மாநில பொருளாளர் மகேஷ், நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் கண்ணன், நெல்லை மாவட்ட ஆலோசகர் மணிகண்டன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பூமாரி செல்வம், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் நாகூர் அறிவு, மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை