தமிழக செய்திகள்

நாமக்கல்: 2 அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி காந்தியவாதி உண்ணாவிரதம்

பழனி தண்டாயுதபாணி சாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

நாமக்கல்,

2 தமிழக அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காந்தியவாதி ரமேஷ், சூரசம்கார உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு

பழனி தண்டாயுதபாணி சாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

சூரசம்கார உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி

இந்த நிலையில் அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவரும், காந்தியவாதியுமான ரமேஷ், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் பதவி விலக வலியறுத்தி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சூரசம்கார உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.