தமிழக செய்திகள்

நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப 'நாசா' முடிவு: முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப 'நாசா' முடிவு செய்துள்ளதாக 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது என 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில்,

உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியில் ஒரே கூரையின் கீழ் பயணித்து வருகின்றன. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 தரையிறங்குவதை 'நாசா' உன்னிப்பாகவும், ஆர்வமாகவும் கவனித்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது. அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப 'நாசா' முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை