சென்னை,
கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடப்புத்தகம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் 1ஆம் வகுப்பு மற்றும் 2ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பிழையாக அச்சாகி உள்ளது. பாடப்புத்தகங்களை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக இந்த பிழையை சரிசெய்து, புதிய புத்தகங்களை அச்சடித்து, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.