தமிழக செய்திகள்

நேஷனல் பேட்மிண்டன் போட்டி: புதுக்கோட்டை வாலிபர் தங்கம் வென்று சாதனை

நேஷனல் பேட்மிண்டன் போட்டியில் புதுக்கோட்டை வாலிபர் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.

தினத்தந்தி

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தை சேர்ந்தவர் ஜனகன் (வயது 27). மீனவர் சமுதாயத்தை சேர்ந்த இவர் கோவாவில் நடந்த நேஷனல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்து உள்ளார். இந்த நிலையில் ஜனகன் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார். அவரை கிராமத்தினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இவர் பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் பேட்மிண்டன் போட்டியில் ஜனகன் தங்கப்பதக்கம் பெற்றது எங்கள் கிராமத்திற்கு மிகவும் பெருமையாக உள்ளது. மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த ஜனகனுக்கு பேட்மிண்டன் போட்டியில் விளையாட போதிய பயிற்சி அளித்தால் அவர் பல்வேறு சாதனைகளை புரிவா. இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு