தமிழக செய்திகள்

தேசிய விளையாட்டு போட்டி: மேலும் பதக்கங்களை குவிக்க வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய விளையாட்டு போட்டியில் மேலும் பதக்கங்களை குவிக்க வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்றனர். தேசிய விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கங்களுடன் 4-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

இந்த நிலையில், தேசிய விளையாட்டு போட்டியில் மேலும் பதக்கங்களை குவிக்க வீரர், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"தமிழக அரசு மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம், தேசிய விளையாட்டு போட்டிக்கு தமிழகம் சார்பில் 380 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளோம். 12 பதக்கங்களை வெற்றி பெற்று தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது. எங்கள் விளையாட்டு வீரர்கள் மேலும் பதக்கங்களை வெல்ல வாழ்த்துகிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது