சென்னை,
மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னதாக இலங்கையில் நேற்று நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் அஜித் தோவல் இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கவர்னர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.