தமிழக செய்திகள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட-12 மீனவர்கள், 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்-மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம், நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட-12 மீனவர்கள், 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம், நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

பனைக்குளம்

ராமநாதபுரம் எம்.பி. .நவாஸ்கனி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் இலங்கைக்கான இந்திய தூதருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறிருப்பதாவது, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சார்ந்த மீனவர்கள் 12 பேர், 2 விசைப்படகுகளில் நெடுந்திவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்த போதும், அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றார்கள். இந்தநிலையில் மீண்டும் 12 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து இருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. வெளியுறவுத்துறை அமைச்சகம் இதில் உடனடியாக தலையிட்டு ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க விரைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.