தமிழக செய்திகள்

அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா

அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா நடைபெற்றது.

தினத்தந்தி

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பச்சையாபுரம் தெற்கு தெருவில் கழுவுடை அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு, உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் கொலு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல ராமலிங்கபுரத்தில் உள்ள சவுடம்மன் கோவில், வெற்றிலையூரணி காளியம்மன் கோவில், விஜய கரிசல்குளம் துர்க்கை அம்மன் கோவில், பேர்நாயக்கன்பட்டியில் காளியம்மன் கோவில், மடத்துபட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்