நாகை,
நாகையில் இந்திய கடற்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடற்படை அலுவலகத்தில் இன்று அதிகாலை காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். துப்பாக்கி சத்தத்தை கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் காவலரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பதும் அவர் இந்திய கடற்படையில் காவலராக அங்கு பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
காவலர் ராஜேஷ் தற்கெலைக்கான காரணம் என்ன? என்று பேலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது நாகை இந்திய கடற்படை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.