தமிழக செய்திகள்

அந்தியூர் அருகேதீக்குளித்து பெண் தற்கொலை

அந்தியூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டா.

தினத்தந்தி

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள அத்தாணி முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 31). இவர் கணவரை விட்டு பிரிந்து பெற்றோரிடம் வசித்து வந்தார். ஜோதிமணிக்கு உடல்நலம் சரியில்லை என கூறப்படுகிறது. இதனால் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோதிமணி திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜோதிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை