தமிழக செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகேமண் அள்ளிய பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்:5 பேர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி அருக அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி அருகே எஸ்.கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் ஓடை பகுதியில் தனியார் நிலத்தில் அரசு அனுமதியின்றி சிலர் மண் அள்ளுவதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.கதிர்நரசிங்கபுரம் ஓடை அருகே பொக்லைன் எந்திரம், டிப்பா லாரி ஒன்று வந்தது. அதன் டிரைவர்கள் போலீசார் வருவதை கண்டதும் வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் அனுமதியின்றி மண் அள்ளியதாக பொக்லைன் எந்திர டிரைவரான ஆனந்த், அதன் உரிமையாளர் இமயவர்மன், துரைப்பாண்டி, செல்வம் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்