தமிழக செய்திகள்

ஆத்தூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்

ஆத்தூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி தெர்மல் நகர் காதர் மீரா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 48). இவர் தனது காரில் நண்பர் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் பாலமுருகன்(48), வேப்பலோடை தெற்கு பாண்டியாபுரம் செல்வராஜ் மகன் ஆனந்த் (28) ஆகிய 3பேரும் ஆத்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். முக்காணியை அடுத்துள்ள செங்கல் சூளை அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த பார்த்தசாரதியின் கார் மீது பலமாக மோதியது. மேலும் அந்த கார் நிற்காமலும் சென்றுவிட்டது. இதில் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயங்களுடன் கூச்சலிட்டவாறு காரில் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற கார் மற்றும் அதில் சென்றவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு