தமிழக செய்திகள்

பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

பவானிசாகர்

நீலகிரி மாவட்டம் ஆடாசோலையை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 30). லாரி டிரைவர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு பழைய இரும்பு பாரத்தை ஏற்றிக்கொண்டு லாரியில் மனோஜ் குமார் புறப்பட்டார். நேற்று காலை ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம் அருக வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த மனோஜ்குமார் மற்றும் அதில் இருந்த கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?