தமிழக செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

செங்கல்பட்டு அருகே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலக்கோட்டையூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் கவுதமன் (59) வசித்து வருகிறார். இவருக்கு மனைவி லதா (53) மகன்கள் சார் முகிலன்( 20), சார் சித்தார்த்தன் (16) உள்ளனர்.

இவர் விஐபிக்களுக்கு பாதுகாப்புப் பணியில் இருந்து வந்தார். சென்னையில் நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர். இவர் கடந்த ஒரு வாரமாக சென்னை வேலா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ள பீகார் மாநில பாட்னா ஐகோர்ட் நீதிபதி அருண்குமாருக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

திடீரென அவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு பணிச்சுமை காரணமாக துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடன் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது காரணமாக என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவம் நடந்த மேலக்கோட்டையூர் காவல் குடியிருப்பில் நேரில் சென்று விசாரணை நடத்தினார்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு