தமிழக செய்திகள்

சின்னசேலம் அருகே மனைவியை கத்தியால் குத்திய டிரைவர் கைது

சின்னசேலம் அருகே மனைவியை கத்தியால் குத்திய டிரைவர் கைது செய்யப்பட்டா.

சின்னசேலம், 

சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் காந்தி மகன் பாண்டியன் (வயது 31) டிரைவர். இவருக்கும் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகள் சுகன்யா (27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுகன்யாவில் நடத்தையில் சந்தேகமடைந்த பாண்டியன் அவரை அடித்து துன்புறுத்து வந்துள்ளார். இதனால் சுகன்யா கோபித்துக்கொண்டு, ராயர்பாளையத்தில் உள்ள தனது தாய் மாமன் பிச்சப்பிள்ளை வீட்டில் மகன், மகளுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ராயர்பாளையத்துக்கு வந்த பாண்டியன், சுகன்யாவை குடும்பம் நடத்த வறுமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், அங்கிருந்த கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சுகன்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டாகள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்