தமிழக செய்திகள்

கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் கடத்தியவர் சிக்கினார்

கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்

தினத்தந்தி

கேரள மாநிலம் குமுளி, வண்டிப்பெரியார், கட்டப்பனை ஆகிய பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சிலர் மொத்தமாக வாங்கி தமிழகத்திற்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லோயர்கேம்ப் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார், லோயர்கேம்ப் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அந்த வழியாக வந்த பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பஸ்சில் கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்த ஆரிப் அகமது (வயது 47) என்பவர், லாட்டரி சீட்டுகளை பையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசா அவரை கைது செய்தனர். மேலும் 960 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்