தமிழக செய்திகள்

கூடலூர் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

கூடலூர் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது

தினத்தந்தி

கூடலூர்அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமை தாங்கினார், டாக்டர் காஞ்சனா, சித்த மருத்துவர் சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களுக்கு இதயம், எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் முதலிய சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் செய்திருந்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை