கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலை அப்பாச்சி பண்ணை அருகே பழக்கடை, உணவகங்கள் மற்றும் அலங்கார பொருள் விற்பனை நிலையங்கள், திராட்சை தோட்டங்கள் உள்ளன. இதனால் தேனி மட்டுமின்றி பிற மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.