தமிழக செய்திகள்

டொம்புச்சேரி அருகே ஓடையில் மணல் அள்ளுவதை தடுக்க கோரிக்கை

டொம்புச்சேரி அருகே ஒடையில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

போடி ஒன்றியம் உப்புக்கோட்டை, டொம்புச்சேரி பாலார்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, அம்மா பட்டி ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய ஓடைகள் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீர் இந்த ஓடைகள் வழியாக பெருமாள் கவுண்டன் பட்டி கண்மாய், டொம்பச்சியம்மன் கண்மாய், குண்டல்நாயக்கன்பட்டி சின்ன கரடு கண்மாய் உள்பட 10-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு வந்தடையும். இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் பெருமாள் கவுண்டன்பட்டி அருகே உள்ள ஓடையில் தினந்தோறும் மாட்டு வண்டிகளில் மர்ம நபர்கள் மணல் அள்ளி வருகின்றனர். இதனால் ஓடைகளின் கரைகள் சேதமடைந்து குளங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஓடைகளில் மண் அள்ளுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு