தமிழக செய்திகள்

எட்டயபுரம் அருகே கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் சிக்கினர்

எட்டயபுரம் அருகே கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் சிக்கினர்

தினத்தந்தி

எட்டயபுரம்:

எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது, சப்- இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் நேற்று கோவில்பட்டி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பேது குமாரகிரி புதூர் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் எட்டயபுரத்தை சர்ந்த 17 வயது மற்றும் 15 வயது சிறுவர்கள் என்றும், அந்த பகுதியில் 2 பேரும் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததுதெரிய வந்தது. அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 350கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, தூத்துக்குடி இளம்சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து