கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு ஊராட்சிக்குட்பட்ட வனத்தாய்புரம்- வெம்பூர் இடையே 3 கி.மீ. தூரம் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். மேலும் சேதமடைந்த சாலையால் மோட்டார்சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்தாய்புரம் - வெம்பூர் இடையே ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.