தமிழக செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு

காட்டுமன்னார்கோவில் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

காட்டுமன்னார்கோவில் , 

காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்வசுதாகர்(வயது 40). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் அதே பகுதியில் உள்ள வடவாற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வசுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனா. இரவு நீண்ட நேரம் ஆகியதால் அவரை தேடும்பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான வீரர்கள் வடவாற்றில் இறங்கி செல்வசுதாகரை தேடினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு செல்வ சுதாகர் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்