தமிழக செய்திகள்

குலசேகரன்பட்டினம் அருகே பெட்டிக்கடையில் புகையிலை பறிமுதல்

குலசேகரன்பட்டினம் அருகே பெட்டிக்கடையில் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் சமத்துவபுரம் விலக்கு ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது கொட்டங்காடு மேலதெருவை சேர்ந்த சுயம்புமகன் மனோகர் (வயது 40) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை சய்வதுதெரிய வந்தது. அந்த கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 73 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்