மதுரை
மதுரை மேலூர் அ.வல்லாளபட்டியில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிர்வாகியுமான அசோகன், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பிரேத பரிசோதனைக்கு தேவையான உபகாரணங்கள் மற்றும் வசதிகள் இல்லாததால் தற்போது பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.