தமிழக செய்திகள்

மேலூர் அருகே கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது -கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

மேலூர் அருகே கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

தினத்தந்தி

மனு அளித்தனர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டி, அய்யாபட்டி ஊராட்சிகளை சேர்ந்த சக்கிடிபட்டி, ஓட்டகோவில்பட்டி, சேக்கிபட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் கிரானைட் குவாரி அமைக்க கூடாது என கூறி கலெக்டரை சந்தித்து நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில், மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேக்கிபட்டி கிராமம், அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலத்திற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிரானைட் குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், கோவில்கள் சேதமடையும் நிலையும் உள்ளது.

விவசாயம் பாதிக்கும்

எனவே, கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது. கிரானைட் குவாரிகளால் விவசாயம் முடங்கிவிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்