தமிழக செய்திகள்

பெண்ணாடம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பெண்ணாடம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்துள்ள எடையூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் தலைமையிலான போலீசார் எடையூர் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 48) என்பவரது வீட்டை சோதனை செய்தபோது, அங்கு 80 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 2 டன் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தியபோது, பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு நபர் அவரது வீட்டில் அரிசியை வைத்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மாவட்ட குடிமை பொருள் குற்ற நுண்ணறிவு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்