தமிழக செய்திகள்

பண்ணாரி அருகேரோட்டை கடந்து சென்ற யானைக்கூட்டம்

பண்ணாரி அருகே ரோட்டை யானைக்கூட்டம் கடந்து சென்றது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் அவ்வப்போது வனவிலங்குகள் வனச்சாலைகளை கடப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. இதை கண்டதும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். 30 நிமிட நேரம் ரோட்டிலேயே யானைகள் அங்கும், இங்குமாக உலா வந்தன. பின்னர் அந்த யானைகள் ரோட்டை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்