தமிழக செய்திகள்

கம்பம் அருகேவேன்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

கம்பம் அருகே வேன்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி பஞ்சாயத்து போர்டு தெருவைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 23). நேற்று இவர், தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் மோட்டாசைக்கிளில் சுருளி அருவிக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை சூர்யா ஓட்டினார். சுருளி அருவி-சுருளிபட்டி சாலையில் தனியார் தோட்டம் அருகே சென்றபோது, எதிரே வந்த வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மாதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார். நாகராஜ் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரான சேலம் மாவட்டம் நாச்சினம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவரை கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்