தமிழக செய்திகள்

சோலார் அருகே பா.ஜ.க. அலுவலகத்தை தமிழ் புலிகள் கட்சியினர் முற்றுகையிட முயற்சி

சோலார் அருகே பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தினத்தந்தி

சோலார்

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை கண்டித்து ஈரோடு தமிழ் புலிகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமையில், மாநில பொருளாளர் இளவேனில் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சோலார் அருகே உள்ள மூலப்பாளையம் கரூர் ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் பா.ஜ.க. அலுவலகத்தை தமிழ் புலிகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீசார் மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது