தமிழக செய்திகள்

தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கொலை...! காதல் விவகாரமா...?

கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வாலிபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

x

சென்ன!

சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேதா (25) தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்லூரி அருகே ராமச்சந்திரன் என்பவருடன் சுவேதா நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ராமச்சந்திரன், சுவேதாவின் கழுத்தில் குத்திக் கொலை செய்ததாக தெரிகிறது. மேலும், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் ராமச்சந்திரன்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சுவேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். காதல் பிரச்சினையில் கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் இதேபோல வாலிபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவங்கள் அனைத்தும் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை