தமிழக செய்திகள்

தென்தாமரைகுளம் அருகே வீடுபுகுந்து நகை பறித்த 3 பேர் கைது

தென்தாமரைகுளம் அருகே வீடுபுகுந்து நகை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே உள்ள கரும்பாட்டூரை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது வீட்டில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது35) உள்பட 3 பேர் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகள் பேசி மேஜை டிராயரில் வைத்திருந்த 3 தங்க மோதிரம், ஒரு தங்க வளையல் உள்பட மொத்தம் 2 பவுன் தங்க நகைகளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் காணிமடம் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சொகுசு காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கரும்பாட்டூர் கண்ணதாசன் வீடு புகுந்து நகைகளை எடுத்து சென்ற செல்வம், மண்டைக்காடு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (38), கன்னங்குளத்தை சேர்ந்த சகாயராஜ் (51) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வம் மீது கொலை வழக்குகள் உள்பட 20 வழக்குகள் உள்ளன. இவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், அவருடன் கைது செய்யப்பட்ட வேல்முருகன் பெயரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்