தமிழக செய்திகள்

தியாகதுருகம் அருகே பணம் வைத்து சூதாட்டம்; 7 வாகனங்கள் பறிமுதல்

தியாகதுருகம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூர் வனப் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த ரூ.1300 ரொக்கம் மற்றும் 4 மொபட், 3 மோட்டார் சைக்கிள் ஆகிய 7 வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் சந்தை மேட்டு பகுதியை சேர்ந்த சரவணன், நரிக்குறவர் தெருவை சேர்ந்த காமராஜ், கஸ்தூரிபாய் நகர் பகுதியை சேர்ந்த கதிர்வேல், சிக்காடு கிராமத்தை சார்ந்த ஏழுமலை, பிரதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ், அந்தியூர் கிராமத்தை சார்ந்த ஆலன் மற்றும் சிலர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.