தமிழக செய்திகள்

தேனி அருகே அரசு மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

தேனி அருகே கோட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார்

தினத்தந்தி

தேனி அருகே கோட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன்  திடீர் ஆய்வு செய்தார். விடுதி மாணவர் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, அடிப்படை வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது விடுதியை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு உணவு அட்டவணையின் படி உணவை தரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என்றும் விடுதி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் சின்னமனூர் அருகே வேப்பம்பட்டியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அரசு மானியத்துடன் காய்கறி சாகுபடி செய்யப்படும் தோட்டங்களில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குனர் சீதாலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்