தமிழக செய்திகள்

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்துதவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் சாவு

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலியானார்.

தினத்தந்தி

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

டாஸ்மாக் ஊழியர்

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் சிவசூரியன் (வயது 38). இவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், சம்பவத்தன்று வேலை முடிந்து மதியம் 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். தெய்வச்செயல்புரம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

தவறி விழுந்தார்

இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை