தமிழக செய்திகள்

உத்தமபாளையம் அருகேமூதாட்டி வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பு

உத்தமபாளையம் அருகே மூதாட்டி வீட்டுக்குள் நாகபாம்பு புகுந்தது.

தினத்தந்தி

உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் சுருளியம்மாள் (வயது 68). இவரது வீட்டின் அருகே கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கற்குவியலில் இருந்து பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. பின்னர் அந்த பாம்பு சுருளியம்மாளின் வீட்டுக்குள் திடீரென புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுருளியம்மாள், பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் விரைந்து வந்து வீட்டில் பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீள நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார். இதையடுத்து அவர், அந்த பாம்பை கோம்பை ராமக்கல் மெட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு