கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று புதிதாக 989 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,63,363 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,85,57,485 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 72,025 மாதிரிகள் கொரோனா பரிசேதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 82 லட்சத்து 38 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 71,835 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,21,520 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 604 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,41,808 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 385 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 3-ம் பாலினத்தவர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரையில் 12,573 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 569 பேர் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 44 ஆயிரத்து 568 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் 6 ஆயிரத்து 222 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 394 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,40,245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்