தமிழக செய்திகள்

இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்...!

இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை சாய்பாபாகாலனியில் பல்சமய நல்லுறவு அறக்கட்டளை சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சிறுபான்மைத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், சலவை எந்திரம், உதவித்தொகைகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் எந்த வித அனுமதியும் இல்லாமல் 17 பேர் இதுவரை தமிழகம் வந்துள்ளனர். மனித நேயத்தோடு அவர்களை பாதுகாப்பாக ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியா வருவது குறித்து ,மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிந்துதான் அதில் ஒரு சரியான முடிவுக்கு வர முடியும் .

உக்ரைனிலிருந்து 1980 மாணவர்கள் தமிழக அரசின் மூலம் இதுவரை அழைத்து வரப்பட்டுள்ளது. இன்னும் 33 பேர் அங்கேயே பாதுகாப்புடன் தங்கிக்கொள்வதாக தெரிவித்ததால் அவர்கள் அங்கு உள்ளனர். தமிழ்நாடு திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்து 3 விதமான கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

முதலாம் ஆண்டு மாணவர்கள் இங்கேயே படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றும், இறுதியாண்டு படித்த மாணவர்கள் சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், இடைநிலை ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்

இந்த மாணவர்களின் கல்வி தொடர்பாக மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முதல்-அமைச்சர் ஒரு நல்ல முடிவை எடுப்பார்.

சொந்த வீடு இல்லாத சிறுபான்மையினர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு