தமிழக செய்திகள்

ஒற்றைத் தலைமை தேவையா? அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பதில்

ஒற்றைத் தலைமை தேவையா? என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவுமே முடிவு செய்யும் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்திய பின் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக ஒற்றைத்தலைமைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஒற்றைத்தலைமை கோரிக்கையை தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

ஒற்றைத் தலைமை தேவையா என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவுமே முடிவு செய்யும். திட்டமிட்டபடி பொதுக்குழு வரும் 23ம் தேதி நடைபெறும். அதிமுக பொதுக்குழு கூட்டம் 100க்கு 1000% நடைபெறும். ஒற்றைத் தலைமை குறித்த முடிவுகள் பேசப்படுமா என எனக்கு தெரியாது. ஜெயக்குமார் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உண்மையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்