சென்னை,
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்று (நேற்று) 77 ஆயிரத்து 266 ஆக உயர்ந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டக்கூடும். இத்தகைய சூழலில் நீட் மற்றும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது.
நுழைவுத்தேர்வு என்ற பெயரில் 25 லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்களை ஆங்காங்கே கூட்டுவது கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதற்கு தான் வழி வகுக்கும். எனவே களச்சூழலை கருத்தில்கொண்டு நீட் மற்றும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.