தமிழக செய்திகள்

நீட் தேர்வில் தோல்வி: மாணவி பிரதீபா தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். #NeetExam #Pradibha #RajiniKanth

சென்னை,

மே 6-ல் நடந்த நீட் தோவை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா. தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதனிடையே தேர்வு முடிவு நேற்று 12.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவலூர் பகுதியை சேர்ந்த மாணவி பிரதீபா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா 12-ம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதே போன்று அரசு பள்ளியில் படித்த பிரதீபா பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போதிலும் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத காரணத்தினால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது பரிதாபத்திற்கு உரியது. இதனை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் என சென்னை விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு