தமிழக செய்திகள்

“நீட்” தோவு கண்ணன் என்ற மற்றொருவரையும் பலி வாங்கியது

நீட் தேர்வெழுத மகளை மதுரைக்கு அழைத்து சென்றுவிட்டு அழைத்து வரும் போது கண்ணன் என்பவா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். #NEET

தினத்தந்தி

மதுரை,

திருத்துறைப்பூண்டி சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவா தனது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுத கேரள மாநிலம், எர்ணாகுளம் அழைத்து சென்ற போது மாரடைப்பு காரணமாக காலையில் உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவத்தை அடுத்து மதுரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்ற மகளை மீண்டும் கூட்டி செல்லும் போது கண்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நீட் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மகள் தேவி ஐஸ்வர்யாவிடம் நெஞ்சுவலிப்பதாக கண்ணன் கூறியுள்ளார். பின்னர் கண்ணன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னா மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்தார். உயிரிழந்த கண்ணன் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கம்புணரியை சேர்ந்தவா என்பது கூறிப்பிடதக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது