தமிழக செய்திகள்

நீட் தேர்வு; இன்று மாலை 4 மணிக்கு பின் முடிவுகள் வெளியீடு: தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பின் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இந்த தேர்வு கடந்த மாதம் 5ந்தேதி நடந்தது. இதேபோன்று ஒடிசாவில் பானி புயலால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு கடந்த மாதம் 20ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பின் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்