நாடு முழுவதும் மருத்துவப்படிப்பு நுழைவுத்தேர்வான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி லாரல் மேல்நிலைப்பள்ளி, சாய் லாரல் இன்டர்நேஷனல் பள்ளி, சேக் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலப்பட்டு டாக்டர்ஸ் பப்ளிக் பள்ளி, சிவபுரம் எம்.ஆர்.எம். இன்டர்நேஷனல் பள்ளி, லேனா விளக்கு மவுன்ட் சீயோன் இன்டர்நேஷனல் பள்ளி ஆகிய 6 மையங்களில் இன்று 'நீட்' தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்வு மைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நுழைவுச்சீட்டு உடன் தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் இன்று காலை முதல் வரத்தொடங்குவார்கள்.