தமிழக செய்திகள்

2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. #NEET #CBSE

சென்னை

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை நீட்; எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்தாண்டும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன.

இதனிடையே, நீட் தேர்வில் மாநில பாடத்திட்டதையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் பின்பற்றப்பட்ட அதே பாடத்திட்டம்தான் 2018-ம் ஆண்டிலும் பின்பற்றப்படும் என சிபிஎஸ்இ விளக்கம் கொடுத்துவிட்டது.

இந்நிலையில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்தாண்டு போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் இந்தாண்டும் நீட் தேர்வு எழுத வேண்டிய நிலையில்தான் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் உள்ளனர்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களையும் கருத்தில் கொண்டு, நீட் கேள்வித்தாளில் மாநில பாடத்திட்டங்களையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்