தமிழக செய்திகள்

நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம்

திருவாரூரில் நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம் நடந்தது.

தினத்தந்தி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. அதன்படி திருவாரூரில் மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே.கலைவாணன் தொடங்கி வைத்தார். இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா, ஈரோடு மாநகராட்சி மகளிரணி அமைப்பாளர் அணிச்சம் கனிமொழி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பனங்குடி குமார், திருவாரூர் நகர செயலாளர் வாரை பிரகாஷ், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் பாண்டியன், பேரூர் செயலாளர் பூண்டி கே.கலைவேந்தன், ஒன்றிய செயலாளர்கள் பாலசந்திரன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது தமிழகத்திற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்கிற அஞ்சல் அட்டையில் பெயர், ஊர், செல்போன் மற்றும் கையெழுத்து போட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க அதற்கான பெட்டியில் போட்டனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு