நெல்லை,
நெல்லை மாவட்டம் பணகுடியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்று வரும் ஜான்சி ராணி, பட்டா கேட்டு வருபவர்களிடம் லஞ்சம் வாங்குவதைப் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த விடியோ காட்சிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை ஆய்வு செய்த அவர், வருவாய் ஆய்வாளர் ஜான்சி ராணி மீது நடவடிக்கை மேற்கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.