அம்பை,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் விழுவது வழக்கம்.தற்போது வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையினால் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தடையால் அருவியில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.